ராஜராஜ சோழனின் சதய விழா: தஞ்சாவூர் மாவட்டத்துக்கு அக்.22 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை சிஜேபி போராட்டம் எதிரொலி: தில்லியில் இணைய சேவை தற்காலிகமாக முடக்கம்!உ.பி.யில் இருந்து மாநிலங்களவைக்கு 10 பேரும் போட்டியின்றி தேர்வு! லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பிரேம் ஆனந்த் சின்ஹா நியமனம்!துரோகத்துக்குக் கிடைத்த இடைக்கால வெற்றி! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்! அவதூறு பேச்சுக்கு எதிரான வெற்றி: இடைத்தேர்தல் வெற்றி குறித்து முதல்வர் விஜய் மதுராந்தகம் தொகுதி தவெக வேட்பாளர் மரகதம் குமரவேல் வெற்றி!முதல்வர் விஜய்யை சந்திக்கிறார் ராகுல் காந்தி! தாராபுரத்தில் தவெக வேட்பாளர் சத்தியபாமா வெற்றிதமிழ் வம்சாவளி நவநீதம் பிள்ளைக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

குடிநீர் கேட்டு ஆட்சியரிடம் மனு

அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிப் பகுதியில் ஆற்றுக் குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

Published On :

அவிநாசி ஒன்றியம் வடுகபாளையம் ஊராட்சிப் பகுதியில் ஆற்றுக் குடிநீர் வசதி செய்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள், ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

திருப்பூரில் மக்கள் குறைதீர்க் கூட்டம், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில், வடுகபாளையம் ஊராட்சி காட்டுவளவு பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் அளித்த மனு:

வடுகபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட காட்டுவளவு பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. இப்பகுதியில் பல ஆண்டுகளாக ஆற்றுக் குடிநீர் வசதி கிடையாது. இதனால், குடிப்பதற்கும், சமையல் செய்வதற்கும் ஆழ்துளைக் கிணற்று நீரைப் பயன்படுத்தி வருகிறோம். வெயில் காலங்களில் மிகுந்த சிரமம் ஏற்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளாக ஆற்றுக் குடிநீர்  கேட்டு பலமுறை அதிகாரிகளிடம் மனு அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதுதொடர்பாக ஊராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டும் நடவடிக்கை இல்லை என அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதேபோல், சிறுகளஞ்சி, கூத்தம்பாளையம், பாலத்தொழுவு, புதுப்பாளையம் ஆகிய 4 ஊராட்சிகளுக்கு, திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னிமலை வரை பேருந்து இயக்க வேண்டும்.

வட்டமலையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் பணியாற்றும் 18 உதவிப் பேராசிரியர்களுக்கு கடந்த 4 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.