
சாலை விபத்து: கேரள இளைஞர்கள் இருவர் சாவு
உடுமலை அருகே வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
உடுமலை அருகே வேனும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம், கோழிக்கோட்டைச் சேர்ந்த அப்துல் லத்தீப்பின் மகன் பாசல் யாசர்(21). அதே பகுதியைச் சேர்ந்த பிரதீப் குமாரின் மகன் விஷ்ணு(21). நண்பர்களான இருவரும், கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று விட்டு, உடுமலை வழியாக இருசக்கர வாகனத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர்.
உடுமலையை அடுத்த ராகல்பாவி பிரிவு அருகே வந்தபோது எதிரே வந்த வேன், இவர்களது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், பாசல் யாசர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த விஷ்ணு, கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து உடுமலை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






