பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

ஆதார் அட்டை வழங்க தாமதம்: வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை

அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில், ஆதார் அட்டை வழங்க காலதாமதம் ஏற்படுத்துவதாகக் கூறி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Updated On :

அவிநாசி அருகே வடுகபாளையம் ஊராட்சியில், ஆதார் அட்டை வழங்க காலதாமதம் ஏற்படுத்துவதாகக் கூறி, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 அவிநாசி ஒன்றியம், வடுகபாளையம் ஊராட்சிக்கு உள்பட்ட ராயக்கவுண்டன்பாளையம், காட்டுவளவு, பிச்சாண்டம்பாளையம், பெரியஓலப்பாளையம், நஞ்சை தாமரைகுளம், காரைகுட்டைப்புதூர், குமரகவுண்டன்புதூர் உள்ளிட்ட கிராமங்களில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.  கடந்த 6 மாதங்களாக ஆதார் அட்டை புகைப்படம் எடுக்க அலைக்கழித்து வருவதாகக் கூறி, இப்பகுதி பொதுமக்கள் அவிநாசி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

 இதுகுறித்து துணை வட்டாட்சியர் ஜெகநாதன் கூறியது:

தினசரி பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கி ஒவ்வொரு பகுதியாக ஆதார் புகைப்படம் எடுக்கப்பட்டு வருகிறது. டோக்கன் பெற்ற பொதுமக்கள் யாரும் வராததால், குழப்பம் ஏற்பட்டு காலதாமதமாகிறது. இன்னும் 20 நாள்களுக்குள் அந்தந்த ஊராட்சி பகுதிகளில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் ஏற்படுத்தப்படும் என்றார். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

 இதில், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றியத் தலைவர் மல்லப்பன், இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன்றிய கமிட்டி உறுப்பினர் சின்ராஜ், வடுகபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க இயக்குநர் பி.ராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.