நெல் காப்பீட்டுத் திட்ட விழிப்புணர்வு முகாம்: விவசாயிகளுக்கு அழைப்பு
காங்கயம் வட்டாரத்தில் நடைபெற உள்ள பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.


காங்கயம் வட்டாரத்தில் நடைபெற உள்ள பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் குறித்த விழிப்புணர்வு முகாமில் பங்கேற்குமாறு விவசாயிகளுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
காங்கயம் வட்டாரம், நத்தக்காடையூர் பகுதியில் கீழ்பவானி பாசனத்துக்கு உள்பட்ட பகுதிகளில் விவசாயிகள் தற்போது நெல் சாகுபடிப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காங்கயம் வேளாண்மை உதவி இயக்குநர் தா.புனிதா கூறியதாவது:
காங்கயம் வட்டாரத்துக்கு உள்பட்ட நெல் சாகுபடி விவசாயிகள், விதைப்பு முதல் அறுவடை வரையிலான பயிர்க் காலத்தில் எதிர்பாராமல் ஏற்படும் பாதிப்புக்கும், இயற்கை பேரிடர்களால் ஏற்படும் பாதிப்புக்கும் பிரதமரின் பியிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்ந்து இழப்பீடு பெற்று பயன்பெறலாம்.
நடப்பு நிதியாண்டில் நெல் பயிருக்கான பிரதமர் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தில் சேர கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஏக்கருக்கு காப்பீட்டுத் தொகையாக ரூ. 419 செலுத்த வேண்டும். இழப்பீட்டுத் தொகை ஏக்கருக்கு ரூ. 27,900 வீதம் வழங்கப்படும். இக்காப்பீட்டுத் திட்டத்தில் இணைவதற்கு ஆதார் எண், சிட்டா அடங்கல், வங்கி சேமிப்புப் புத்தக நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விவசாயிகள் சமர்ப்பிக்க வேண்டும். நான்கு சாலை சந்திப்பு அல்லது நத்தக்காடையூர் பகுதியில் உள்ள பொது சேவை மையத்தில் காப்பீடு செய்து கொள்ளலாம்.
இது குறித்த விழிப்புணர்வு முகாம்கள் நெல் நடவு செய்யப்படும் கிராமங்களில் நடைபெற உள்ளது. நவம்பர் 2-ஆம் தேதி நத்தக்காடையூர் ஊராட்சி அலுவலகம், 3-ஆம் தேதி முள்ளிப்புரம் மற்றும் பழைய வெள்ளியம்பாளையம், 4-ஆம் தேதி குட்டப்பாளையம், 5-ஆம் தேதி பழையகோட்டை கிராம நிர்வாக அலுவலகம், 6-ஆம் தேதி பொடாரம்பாளையம், 7-ஆம் தேதி திட்டம்பாளையம், 9-ஆம் தேதி குருக்கபாளையம், 10-ஆம் தேதி நஞ்சப்பகவுண்டன்வலசு ஆகிய கிராமங்களில் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற உள்ளன. இதில், விவசாயிகள் கலந்து கொண்டு பயன்பெறலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...