எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!வணிக சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு! டீ, காபி விலை உயர்கிறதா?மத்திய கிழக்கு போா்: இந்திய ஏற்றுமதி ரூ. 92,300 கோடி வரை சரியும் அபாயம்!கடலோர மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு!10-ஆம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம்!பெட்ரோல், டீசல் விலை இப்போதைக்கு உயராது; சிலிண்டா் முன்பதிவுக்கு கட்டுப்பாடு!ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாகவே அனுமதி: அமெரிக்கா மீண்டும் உறுதிபட்டயக் கணக்காளா் தோ்வு: மதுரை மாணவி முதலிடம்!
/

தொழிற்பேட்டைகள் அமைக்கக் கோரி முதல்வருக்கு மனு

சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வகையில் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும் என்று தென்னிந்திய காலர் சர்ட் மற்றும்

News image
Updated On :2 நவம்பர் 2017, 12:54 am

DIN

சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வகையில் தொழிற்பேட்டைகள் அமைக்க வேண்டும் என்று தென்னிந்திய காலர் சர்ட் மற்றும் உள்ளாடை சிறு தொழில் முனைவோர் சங்கம் (சிஸ்மா) சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 இது குறித்து சிஸ்மா சார்பில் பொதுச் செயலாளர் கே.எஸ்.பாபுஜி தமிழக முதலவருக்கு அனுப்பியுள்ள கடிதம்:
 சிறு, குறு, நடுத்தர வர்த்தகம் கடும் மந்த நிலையை நோக்கி செல்வதால் பின்னலாடைத் தொழில் துறையினர் மனஉளைச்சலுக்கு ஆளாகின்றனர். ரூ. 25 லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை முதலீடு உள்ள சிறு, குறு நிறுவனங்களின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கான தொழிற்பேட்டைகளை திருப்பூர், கோவை, கரூர் போன்ற தொழில் நகரங்களை ஒட்டி அமைக்க வேண்டும்.
    ஜிஎஸ்டி வரி விதிப்புக் காரணமாக ஏற்பட்ட தொழில் சரிவை சரி செய்யும் வகையில், திருப்பூர் மாவட்டத்தில் சிறு, குறு பின்னலாடை நிறுவனங்கள் வளர்ச்சியடையும் வகையில் தொழிற்பேட்டைகளை அமைத்துத் தர வேண்டும். இதனால், தொழில் வளர்ச்சி, புதிய முதலீட்டாளர்கள் வருகை, வேலைவாய்ப்பு, உள்நாட்டு வர்த்தகத்தின் வரி விகிதாச்சாரங்கள் வளர்ச்சி அடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.