திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆர்ப்பாட்டம்

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

பண மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து திருப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் புதிய பேருந்து நிலையம் முன் இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசைக் கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில கட்டுப்பாட்டுக் குழு உறுப்பினர் ஜி.காளியப்பன் ஆகியோர் தலைமை வகித்தனர். மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் கே.காமராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலர் எம்.ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இரு கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com