வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

தொடர் மழையால் தென்னை நார் உற்பத்தி பாதிப்பு

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழையால் தென்னை நார் உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:17 am

DIN

கடந்த சில வாரங்களாக பெய்து வரும் தொடர்மழையால் தென்னை நார் உற்பத்தி கடும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. இதனால் தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
உடுமலை, பொள்ளாச்சி, தாராபுரம் வட்டங்களில் தென்னை உற்பத்தி அதிக அளவில் இருப்பதால் இந்த பகுதிகளில் சுமார் 250 க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய அளவிலான தென்னை நார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
இங்கிருந்துத் தயாராகும் தரமான தென்னை நார்கள் கேரளத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டு, பின்னர் அங்கிருந்து மிதியடி, மெத்தை, சோபாசெட் போன்ற மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன. நாள்தோறும் ஆயிரக்கணக்கான டன் தென்னை நார்கள் இந்தப் பகுதிகளில் இருந்து  லாரிகள் மூலம் அனுப்பி வைக் கப்பட்டு வரும் நிலையில்,  கடந்த சில வாரங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த தொழில் முடங்கிப் போகும் நிலை ஏற்பட்டு வருகிற து.
குறிப்பாக, தொழிற்சாலைகளில் நார் அதிக அளவில் இருப்பு விழுந்து வருவதால் கேரளத்துக்கு அனுப்பி வைக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.  இதனால் மீண்டும், உற்பத்தியைத் தொடங்கவும், முதலீடுகள் செய்யவும் தொழிற்சாலை உரிமையாளர்கள் தயங்கி வருகின்றனர்.
இதன் காரணமாக தொழி ற்சாலைகளில் பணியாற்றி வரும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தென்னை நார் உற்பத்தியாளர்கள் கூறியது:
தென்னை நார்களை நன்றாக வெயிலில் உலர்த்தும்போதுதான், அதன் தரம் உயரும். ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் தென்னை நார்களை உலர்த்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், கேரளத்திலும் மழை பெய் து வருவதால் இங்கு உற்பத்தியாகும் நார்களை அவர்கள் வாங்கத் தயங்கி வருகின்றனர். இதுபோக அனுப்பி வைக்கத் தயாராக உள்ள நார்கள் இருப்பில் உள்ளது.
இவைகளை மழையில் பாதுகாப்பாக வைக்க வேண்டிய சூழ்நிலையில் பெரிய அளவில் பண முடக்கம் ஏற்பட்டு வருகிறது. ஆனாலும் தொழிலாளர் களுக்கு முடிந்த அளவு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறோம். மழை தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் நிலைமை மோசமாகி விடும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.