பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நகராட்சியில் வீடுவீடாக கொசு ஒழிப்புப் பணி

வெள்ளக்கோவில் நகராட்சியில் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணி செய்யப்படுகிறது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 1:20 am

DIN

வெள்ளக்கோவில் நகராட்சியில் வீடு வீடாகச் சென்று கொசு ஒழிப்புப் பணி செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு மாதமாக மர்மக் காய்ச்சல் பாதிப்பு இருந்து வருகிறது. டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களிடையே ஒருவித அச்சம் நிலவி வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ளஆயிரக்கணக்கில் செலவு ஏற்படுகிறது. இந்நிலையில் மர்மக் காய்ச்சல் பரவுவதற்குக் காரணமாக இருக்கும் கொசு உற்பத்தியைத் தடுக்க நகராட்சி நிர்வாகம் முடுக்கி விடப்பட்டுள்ளது.
 நகராட்சி சுகாதார அலுவலர்கள் ஒவ்வொரு வீடு, தொழில் நிறுவனம், கட்டடங்களுக்கு நேரடியாகச் சென்று தண்ணீர் தொட்டிகளில் கொசுப் புழு ஒழிப்பு திரவ மருந்து ஊற்றியும், சுற்றுப்புறங்களில் நோய்த் தடுப்பு மருந்து, குளோரின் பொடி தூவியும் வருகின்றனர். மேலும் குளிர்சாதனப் பெட்டி போன்றவற்றைத் தூய்மையாக வைத்திருக்கவும் அறிவுறுத்தப்படுகிறது. நோய்த் தடுப்புப் பணியாளர்களிடம் மறுப்புத் தெரிவிக்காமல், அனைவரும் முழு ஒத்துழைப்புத் தரவேண்டுமென நகராட்சி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.