வேன் மோதி விவசாயி சாவு

வெள்ளக்கோவில் அருகே  வேன் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

வெள்ளக்கோவில் அருகே  வேன் மோதியதில் விவசாயி புதன்கிழமை உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில்,  மூலனூர் சாலையிலுள்ள புதுப்பையைச் சேர்ந்தவர் ராஜரத்தினம் (68). விவசாயி. இவர், முளையாம்பூண்டி சாலையிலுள்ள தனது தோட்டத்துக்கு இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை சென்று கொண்டிருந்தார். கோம்பை மேட்டுப்புதூர் அருகே சென்றபோது,  அவ்வழியே வந்த வேன்,  இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராஜரத்தினம்,  மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com