வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

குழந்தைகள் புத்தகக் கண்காட்சி

தேசிய நூலக வார விழாவையொட்டி உடுமலை கிளை நூலகம் எண் 2-இல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2017, 2:11 am

DIN

தேசிய நூலக வார விழாவையொட்டி உடுமலை கிளை நூலகம் எண் 2-இல் குழந்தைகள் புத்தகக் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.
புத்தகக் கண்காட்சியை அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.வெள்ளைச்சாமி துவக்கிவைத்தார்.
ஓய்வுபெற்ற கனரா வங்கி மேலாளர் ராமதாஸ் வாழ்த்துரை வழங்கினார். இதில் நகராட்சி விரிவு நடுநிலைப் பள்ளி மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டு புதிய நூல்களை ஆர்வத்துடன் பார்வையிட்டனர்.
இதைத் தொடர்ந்து "வாசிப்பை நேசிப்போம்' என்கிற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு,  ஆசிரியர் கா.மு.அலாவுதீன் தலைமை வகித்தார்.  நூலகர் கணேசன் வரவேற்றார். இதில் வாசிப்புத் திறன் வளர நூலகத்தை அடிக்கடி பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் எடுத்துரைக்கப்பட்டது. நூலகர் மகேந்திரன் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.