விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

திருப்பூரில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட 4 பேர் கைது: 127 பவுன் பறிமுதல்

திருப்பூரில் தொடர் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 127 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image
Updated On :17 நவம்பர் 2017, 12:50 am

DIN

திருப்பூரில் தொடர் நகைப் பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த 4 பேரை மாநகர தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து 127 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
திருப்பூர் மாநகரில் பல்வேறு பகுதிகளில் நிகழ்ந்த நகைப்பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த மாநகரக் காவல் ஆணையர் பொ.நாகராஜன் உத்தரவிட்டிருந்தார். இதற்காக துணை ஆணையர் (சட்டம் ஒழுங்கு, குற்றம், போக்குவரத்து)  அ.கயல்விழி மேற்பார்வையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் திருப்பூர் பகுதியில் கடந்த 2ஆண்டுகளாக சங்கிலி பறிப்பு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த கோவை, உக்கடம், அல்அமீன் காலனியை சேர்ந்த எஸ்.சபீல் (41) என்பவரைக் கடந்த புதன்கிழமை கைது செய்தனர். இதேபோல்,  நகைப் பறிப்பு உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த அரியலூர் மாவட்டம்,  திருமானூர்,  குலமாணிக்கம் பகுதியைச் சேர்ந்த ஜி.ஜெகதீஷ் (36), திருப்பூர், 15 வேலம்பாளையம், நேரு வீதியைச் சேர்ந்த டி.நவீன்குமார் (23), திருப்பூர், காங்கயம் சாலை, மணியக்காரம்பாளைம், வள்ளியம்மை நகரைச் சேர்ந்த ஏ.பாபு (எ) சைனா பாபு (45) ஆகியோரை வெவ்வேறு தேதிகளில் போலீஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்டவர்கள் மீது திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் 7 வழக்குகள், அனுப்பர்பாளையத்தில் 5 வழக்குகள், தெற்கு காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, 15-வேலம்பாளையத்தில் 5 வழக்குகள், ஊரக காவல் நிலையத்தில ஒரு வழக்கு,  அவிநாசி காவல் நிலையத்தில் ஒரு வழக்கு என மொத்தம் 20 வழக்குகள் உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து மொத்தமாக 127 பவுன் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவர்களைக் கைது செய்த தனிப்படையைச் சேர்ந்த ஆய்வாளர் மற்றும் காவலர்களை மாநகரக் காவல் ஆணையர் பாராட்டி, வெகுமதி வழங்கினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.