காங்கயம் அருகே பஞ்சு ஆலையில் தீ விபத்து

காங்கயம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு  மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
Updated on
1 min read

காங்கயம் அருகே தனியாருக்கு சொந்தமான பஞ்சு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பஞ்சு  மற்றும் இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன.
  திருப்பூர் மாவட்டம்,  காங்கயம் அருகே பாலசமுத்திரம்புதூரில் பாலசுப்பிரமணியம் என்பவருக்கு சொந்தமான பஞ்சு ஆலை இயங்கி வருகின்றது. இதில் பழைய பனியன் கழிவுத் துணியைப் பிரித்து பஞ்சு தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,  இந்த ஆலையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 3 மணி அளவில் திடீரென தீப்பிடித்தது.  அப்போது பணியில் இருந்தவர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமள என எரிந்து பஞ்சாலை முழுவதும் பரவியது.
தகவலின்பேரில்,  சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காங்கயம் தீயணைப்புத் துறையினர் 3 மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பஞ்சு,  பனியன், துணிகள் மற்றும் இயந்திரங்கள் உள்பட ரூ. 27 லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி சேதமாயின. இந்த தீ விபத்து குறித்து காங்கயம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com