புதிய முகவரிக்கு குடிபெயர்ந்தார் நிதீஷ் குமார்! 98.47 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பிவிட்டன: ரிசா்வ் வங்கி மேற்கு வங்கம்: 15 வாக்குச்சாவடிகளில் நாளை மறுவாக்குப்பதிவு! ஜிஎஸ்டி வருவாய் ரூ. 2.43 லட்சம் கோடியாக உயர்வு! கொடைக்கானலில் வாகனங்களுக்கு 2 நாள் இலவச அனுமதி! தங்கம் விலை ஒரேநாளில் 2ஆவது முறையாக குறைவு! தேர்தல் முடிந்தவுடன் சிலிண்டர் விலையை உயர்த்திய பாஜக அரசு: மு.க. ஸ்டாலின் கண்டனம் வணிக சிலிண்டர் விலை உயர்வு ஒவ்வொருவரின் உணவுத் தட்டிலும் எதிரொலிக்கும்! ராகுல் கண்டனம் ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு!
/

விசைத்தறியாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

Updated On :9 ஏப்ரல் 2018, 12:48 am

திருப்பூர், கோவை மாவட்ட கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர் சங்க ஆலோசனைக் கூட்டம் பல்லடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு,  சங்கத் தலைவர் இரா.வேலுசாமி தலைமை வகித்தார். செயலாளர் அப்புக்குட்டி என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். நிர்வாக குழு உறுப்பினர் பாலாஜி, முத்துக்குமார் ஆகியோர் வரவேற்றனர்.  
கூலி உயர்வு தொடர்பாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏப்ரல் 12-ஆம் தேதி நடைபெறும் பேச்சுவார்த்தையில் ஒப்பந்தப்படி ஜவுளி உற்பத்தியாளர்கள் கூலியை வழங்க ஒப்புக்கொள்ளாவிடில் திருப்பூர், கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து விசைத்தறிகளையும் நிறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 
இக்கூட்டத்தில் விசைத்தறியாளர்கள் கரைப்புதூர் ராஜேந்திரன், ஆறுக்குட்டி உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர். சக்திவேல் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.