அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வந்து ராயம்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்ரல் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
இதையொட்டி கிராம மக்கள் அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண்குதிரையை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில் அவிநாசி, ராயம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த 3 மண் குதிரைகளை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக ஆகாசராயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை எடுத்து வந்தனர்.
நடுவச்சேரி சாலை, மடத்துப்பாளையம் சாலை, சேவூர் சாலை, கச்சேரி வீதி, வடக்கு, கிழக்கு ரத வீதி, கோவை பிரதான சாலை, மங்கலம் சாலை வழியாக இவர்கள் ஆகாசராயர்கோயிலை அடைந்தனர். அப்போது ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள், குடிநீர், பழரசம், நீர்மோர், மாலைகள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனர்.
ஆகாசராயர் கோயிலில் மண்குதிரைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர். இதைத்தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தமிழ்நாட்டில் வாக்களிப்பு! வெளிநாட்டு குடியுரிமை பெற்ற 10 பேர் சிறையில் அடைப்பு!

106 மீட்டருக்கு சிக்ஸர் அடித்த திலக் வர்மா..! நடப்பு சீசனில் நீண்ட தூரம்!

பஞ்சாபுக்கு தொடா்ந்து 5-ஆவது தோல்வி
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் சிரசுத் திருவிழா!
விடியோக்கள்

சூரியன் ஒருபோதும் மறையாது! மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் மு.க. ஸ்டாலின் Speech
இணையதளச் செய்திப் பிரிவு

அனைத்து துறை நிர்வாகிகளுடன் Review Meeting! அமைச்சர் ஆதவ் அர்ஜுனா | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | லக்னௌவை வெல்லுமா ஓவர்டன் இல்லாத சிஎஸ்கே? | Jamie Overton | CSK |
தினமணி செய்திச் சேவை

விவாத வீரர்...கேரளத்தின் முதல்வர்... யார் இந்த வி.டி. சதீசன்?
இணையதளச் செய்திப் பிரிவு
