ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!
/

குடிநீர் கேட்டு அவிநாசி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

அவிநாசி அருகே பெரியாயிபாளையம் காரைக்காடு பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:38 am IST

அவிநாசி அருகே பெரியாயிபாளையம் காரைக்காடு பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனர்.
அவிநாசி ஒன்றியம்,  பழங்கரை ஊராட்சிக்கு உள்பட்ட பெரியாயிபாளையம் காரைக்காடு,  தந்தை பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 
இப்பகுதியில் கடந்த பல மாதங்களாக 20 நாள்களுக்கு ஒரு முறையே குடிநீர் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது.  தற்போது மிகவும் குறைவான அளவே குடிநீர் கிடைப்பதால் பொதுமக்கள் அவதியுற்று வந்தனர். 
இந்நிலையில், சீரான குடிநீர் விநியோகம்,  குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்,   எரியாத தெருவிளக்குகளை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் அவிநாசி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டு மனு அளித்தனர்.  
மனுவை பெற்றுக் கொண்ட ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர்,  2 நாள்களுக்குள் பழுதடைந்துள்ள ஆழ்துளைக் கிணறுகளுக்கு மின் மோட்டார் பொருத்தியும்,  குழாய்களை சீரமைத்தும் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.