சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 263-ஆவது பிறந்த தினத்தையொட்டி, காங்கயம் அருகேயுள்ள மேலப்பாளையத்தில் அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
தீரன் சின்னமலை பிறந்த ஊரான காங்கயம் தாலுகா, பழையகோட்டை ஊராட்சிக்கு உள்பட்ட மேலப்பாளையம் கிராமத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், தீரன் சின்னமலையின் உருவப் படத்துக்கு நமது கொங்கு முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலர் காங்கயம் எம்.தங்கவேல் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சியில், அக்கட்சியின் துணைச் செயலர் கே.யுவராஜ்குமார், அவைத் தலைவர் முருகசாமி, தலைமை நிலையச் செயலர் பொன்.முருகேஷ், மாநில அமைப்பாளர் சண்முகம், பாமக துணைத் தலைவர் பொங்கலூர் ரா.மணிகண்டன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ராஜினாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் இணைந்தனர்!
சர்தார் - 2 சிறப்பு போஸ்டர்!

யாருக்கும் பாதுகாப்பில்லாத மாநிலமாகிவிட்டது தமிழ்நாடு: கனிமொழி

எஸ்.பி. வேலுமணி தரப்பு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூன்று பேர் ராஜிநாமா!
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


