எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரை சுமந்து நேர்த்திக்கடன்

அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வந்து ராயம்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.

Updated On :18 ஏப்ரல் 2018, 9:39 am IST

அவிநாசி ஆகாசராயர் கோயிலுக்கு மண் குதிரைகள் சுமந்து வந்து ராயம்பாளையம் கிராம மக்கள் செவ்வாய்க்கிழமை நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றதும், கொங்கு ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதுமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த்  திருவிழா ஏப்ரல் 20-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. 
இதையொட்டி கிராம மக்கள் அவிநாசி, மங்கலம் சாலையில் உள்ள ஆகாசராயர் கோயிலுக்கு மண்குதிரையை ஊர்வலமாக எடுத்து சென்று வழிபடுவது வழக்கம்.
 இந்நிலையில் அவிநாசி, ராயம்பாளையத்தைச் சேர்ந்த பொதுமக்கள் மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்த 3 மண் குதிரைகளை சப்பரத்தில் வைத்து ஊர்வலமாக ஆகாசராயர் கோயிலுக்கு செவ்வாய்க்கிழமை எடுத்து வந்தனர்.
நடுவச்சேரி சாலை,  மடத்துப்பாளையம் சாலை, சேவூர் சாலை, கச்சேரி வீதி, வடக்கு,  கிழக்கு  ரத வீதி, கோவை பிரதான சாலை,  மங்கலம் சாலை வழியாக இவர்கள்  ஆகாசராயர்கோயிலை அடைந்தனர்.  அப்போது  ஊர்வலத்தில் வந்த பக்தர்களுக்கு வழி நெடுகிலும் பொதுமக்கள்,  குடிநீர், பழரசம்,  நீர்மோர், மாலைகள் உள்ளிட்டவை வழங்கி வரவேற்றனர். 
ஆகாசராயர் கோயிலில் மண்குதிரைகளை வைத்து சிறப்பு பூஜைகள் செய்தனர்.  இதைத்தொடர்ந்து ஆகாசராயர் மற்றும் காத்தவராயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.