கருவலூரில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி, அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கருவலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தில் இரு ஊர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனு:
கருவலூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில் எரிவாயு உருளை கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது.
மேலும் இக்கிடங்கு அமையவிருக்கும் இடத்துக்கு அருகில் பிரசித்தி பெற்ற கங்காதீஸ்வரர் ஆலயம், பெருமாள் கோயில், ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்டவை உள்ளன.
மேலும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஏற்கெனவே எதிர்ப்பு உள்ள நிலையில் இதற்கான உரிமம் பெற உரிய ஆவணம் இல்லாதால், உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது முறையற்ற முறையில் அனுமதி பெற்றுள்ளனர். எனவே இப்பகுதியில் எரிவாயு உருளை கிடங்கு அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குன்னம் பகுதியில் நாளை (ஆக. 17) மின்தடை

திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த் - புகைப்படங்கள்
பிரபு தேவா - வடிவேலு நடிக்கும் பேங் பேங் படத்தின் டீசர் வெளியீடு!

கோட்டையில் கொடியேற்றிய முதல்வர் விஜய்! இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 15 - நேரலை!
விடியோக்கள்
ரசிகர்களைக் கவர்ந்ததா மகுடம்? திரைவிமர்சனம்


