கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

கருவலூரில் எரிவாயு உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு

கருவலூரில் எரிவாயு  உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.

Published On :30 ஜனவரி 2024, 10:01 pm IST

கருவலூரில் எரிவாயு  உருளைக் கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம சபையில் பொதுமக்கள் புதன்கிழமை மனு அளித்தனர்.
சுதந்திர தினத்தையொட்டி,  அவிநாசி ஒன்றியத்துக்கு உள்பட்ட கருவலூர், ராமநாதபுரம் ஆகிய பகுதிகளில் கிராமசபைக் கூட்டங்கள் நடைபெற்றன. இக்கூட்டத்தில் இரு ஊர் பொதுமக்கள் சார்பில் அளித்த மனு:
கருவலூரில் இருந்து ராமநாதபுரம் செல்லும் வழியில்  எரிவாயு உருளை கிடங்கு அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. இது பொதுமக்களுக்கு பெரும் இடையூறு ஏற்படுத்துவதாக உள்ளது. 
மேலும் இக்கிடங்கு அமையவிருக்கும் இடத்துக்கு அருகில் பிரசித்தி பெற்ற கங்காதீஸ்வரர் ஆலயம், பெருமாள் கோயில்,  ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்டவை உள்ளன. 
மேலும்  நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். ஏற்கெனவே எதிர்ப்பு உள்ள நிலையில் இதற்கான உரிமம் பெற உரிய ஆவணம் இல்லாதால், உரிமம் ரத்து செய்யப்பட்டது. தற்போது முறையற்ற முறையில் அனுமதி பெற்றுள்ளனர். எனவே இப்பகுதியில்  எரிவாயு உருளை கிடங்கு அமைக்க அனுமதி வழங்கக் கூடாது என மனுவில் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.