
கிணற்றில் விழுந்த நாய் உயிருடன் மீட்பு
வெள்ளக்கோவிலில் கிணற்றில் விழுந்த வீட்டு நாய் உயிருடன் தீயணைப்புத் துறையினரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவிலில் கிணற்றில் விழுந்த வீட்டு நாய் உயிருடன் தீயணைப்புத் துறையினரால் புதன்கிழமை மீட்கப்பட்டது.
வெள்ளக்கோவில், சேரன் நகரை அடுத்த உடையார் தோட்டத்தைச் சேர்ந்தவர் குழந்தைசாமி (70), கூலித் தொழிலாளி. இவர் இங்குள்ள வாடகை வீட்டில் வசித்து வருகிறார். தனது வீட்டில் நாய் வளர்த்து வருகிறார்.
இந்நிலையில், வீட்டுக்கு அருகிலுள்ள கிணற்றுக்குள் நாய் தவறி விழுந்து விட்டது. சுமார் 50 அடி ஆழமுள்ள கிணற்றில் 15 அடி உயரத்துக்குத் தண்ணீர் உள்ளது. கிணற்றுக்குள் மேட்டுப் பகுதியில் நாய் நின்று கொண்டு குரைத்துள்ளது. கிணற்றுக்குள் இறங்க படிகள் இல்லாததால் யாரும் உள்ளே இறங்கவில்லை.
இது குறித்து தீயணைப்புப் படையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்பு நிலைய அலுவலர் சி.தனசேகரன், போக்குவரத்து அலுவலர் வேலுச்சாமி உள்ளிட்ட தீயணைப்புப் படையினர் கயிறு மூலமாக கிணற்றுக்குள் இறங்கி நாயை உயிருடன் மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





