பள்ளிகளுக்கு 3 வகையான ஸ்டிக்கர் ஒட்டப்படும்: ஆதவ் அர்ஜுனா பேச்சுகொளத்தூர் தொகுதியில் வி.எஸ். பாபு வெற்றியை எதிர்த்து மு.க. ஸ்டாலின் வழக்கு! பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தி வழங்க வேண்டும்: இபிஎஸ் பரந்தூர் விமான நிலைய அறிவிப்பு! திமுக உறுப்பினர்கள் வெளிநடப்புமத்திய பாதுகாப்பு அமைச்சக பெண் அதிகாரி கருவுற்றிருந்த நிலையில் மரணம்! அதிர்ச்சி காரணம்ஓணம் பண்டிகை: சபரிமலை கோயிலில் இன்று நடை திறப்பு கட்டணமில்லா மகளிர் பேருந்து திட்டம் எப்போது? பேரவையில் அறிவித்தார் முதல்வர் விஜய்!பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும்! அறிவித்தார் முதல்வர் விஜய்!! ஆண்டுக்கு 3 சிலிண்டர் இலவசம்: அன்னபூரணி சூப்பர் 6 திட்டம் தொடங்குவது எப்போது? முதல்வர் விஜய் அறிவிப்பு

திருப்பூரில் நியாயவிலைக் கடை முற்றுகை

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள நியாயவிலைக் கடையில் உணவுப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனக் கூறி

Published On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

திருப்பூர் நொய்யல் வீதியில் உள்ள நியாயவிலைக் கடையில் உணவுப் பொருள்கள் முறையாக வழங்கப்படுவதில்லை எனக் கூறி அப்பகுதி மக்கள் நியாயவிலைக் கடையைத் திறக்கவிடாமல் புதன்கிழமை முற்றுகையிட்டனர். திருப்பூர், நொய்யல் வீதி நியாயவிலைக் கடையில் அப்பகுதியைச் சேர்ந்த 700க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பொருள்களை வாங்கி வருகின்றனர். 
இந்நிலையில், இங்குள்ள நியாயவிலைக் கடையைக் குறிப்பிட்ட நேரத்துக்குத் திறப்பதில்லை. மண்ணெண்ணெய் வாங்க நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பருப்பு உள்ளிட்ட பொருள்கள் வாங்கும்போது பிற பொருள்களையும் வாங்கச் சொல்லி ஊழியர்கள் வற்புறுத்துகின்றனர். எனவே கடையை உரிய நேரத்துக்குத் திறந்து, முறையாக செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் திருப்பூர் தெற்கு போலீஸார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். உரிய நேரத்துக்குக் கடை திறக்கப்பட்டு முறையாகப் பொருள்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.   இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.