கிராம நிர்வாக அலுவலர்கள் பேரணி
கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டனப் பேரணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் கண்டனப் பேரணியில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர், தென்னம்பாளையம் அரசுப் பள்ளியில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியில் ஈடுபட்டனர். இந்தப் பேரணிக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார்.
பேரணி குறித்து அதில் பங்கேற்றவர்கள் கூறியதாவது:
கிராம நிர்வாக அலுவலர் அலுவலகங்களில் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். ஒரே அரசாணையின் மூலமாக மாவட்ட மாறுதல் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களுக்கான அடிப்படைக் கல்வித் தகுதியை பட்டப் படிப்பாக உயர்த்த வேண்டும் என்றனர்.
பேரணியின் நிறைவுக்குப் பின் கோரிக்கை மனுவை மாவட்ட ஆட்சியரிடம் அளித்தனர்.
இதில், மாவட்ட செயலாளர் சசிகுமார், மண்டலப் பொருளாளர் மாணிக்கவாசகம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






