தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மூலனூரில் ஓய்வூதியர் தின விழா

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் ஓய்வூதியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

Updated On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூரில் ஓய்வூதியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
அகில பாரத மூத்த குடிமக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, கூட்டமைப்பின் வட்டாரத் தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். வட்டார துணைத் தலைவர் பொன்னையன், ஒன்றியச் செயலாளர்கள் காந்திமதி, தேவராஜ் ஆகியோர் முன்னிலைவகித்தனர்.
கூட்டத்தில், ஓய்வூதியர்கள் அனைவருக்கும் இலவச பேருந்து பயண அட்டை வழங்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.9,000 ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டாரச் செயலாளர் மனோகரன், பொருளாளர் ரகுநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உடுமலையில்...
அகில பாரத மூத்த குடிமக்கள் பென்சனர்கள் கூட்டமைப்பின்  சார்பில் ஓய்வூதியர் தின விழா உடுமலையை அடுத்துள்ள கணியூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி மடத்துக்குளம் கிளை சார்பில் 70 வயது நிறைவு பெற்ற மூத்த உறுப்பினர்களுக்குப் பாராட்டு விழா, அமைப்பின் வெள்ளி விழா, மடத்துக்குளம் கிளையின் 20 ஆவது ஆண்டு விழா என முப்பெரும் விழாவாக நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு,  தலைவர் க.நடராசன் தலைமை வகித்தார். செயலாளர் தி.நாகராசன் வரவேற்றார். ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி ஓய்வு பெற்ற ஆங்கில துறைத் தலைவர் தைலாம்பாள், கருவூல அலுவலர் ச.சரவணன், வங்கி மேலாளர் அ.மோகன்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு பேசினர். திருப்பூர் மாவட்ட பொறுப்பாளர் வேலுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி மூத்த உறுப்பினர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தப்பட்டனர். மாநில நிர்வாகி சாகுல்ஹமீது நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.