பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்! தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் நன்றி!அரசியல் சந்நியாசம் மேற்கொள்ள மாட்டேன்: மமதா பானர்ஜி உறுதி!இளைஞர்களின் உலகளாவிய வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்த ஜெர்மன், ஜப்பானிய மொழிப் பயிற்சி: உயர்கல்வித் துறை விவசாய மாணவர்களுக்கு கல்விக் கட்டண விலக்கு! உயர்கல்வித் துறை அறிவிப்புபின்வாசல் வழியாக இட ஒதுக்கீட்டை ஒழிக்கத் திட்டமிடும் மோடி அரசு: கார்கே குற்றச்சாட்டுபள்ளிச் சீருடையுடன் இனி ஸ்போர்ட்ஸ் ஜெர்ஸி வழங்கப்படும்: அமைச்சர் ராஜ்மோகன்அமைச்சர் மரிய வில்சன் மீது லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்! அன்பில் மகேஸ்எல்லைக் காவலர்களுக்கு உதவித் தொகை உயர்வு: அமைச்சர் ராஜ்மோகன்பள்ளி மாணவர்களுக்கு கண், காது, பல் பரிசோதனை செய்யப்படும்: பள்ளிக் கல்வித் துறை

வேலப்பநாயக்கன்வலசில் குடிநீர்த் தட்டுப்பாடு

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்பநாய்க்கன்வலசில் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

Published On :30 ஜனவரி 2024, 11:25 pm IST

வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம், வேலப்பநாய்க்கன்வலசில் கடும் குடிநீர்த் தட்டுப்பாட்டால் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
 இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:
வேலப்பநாய்க்கன்வலசு கிராமத்தில் 70 -க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஊரிலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவில் இலுப்பைக்கிணறு செல்லும் வழியில் எலந்தைக் கொட்டப்பாறை என்ற இடத்தில் 1990 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட ஆழ்துளைக் கிணற்றிலிருந்து 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம் இதுவரை தண்ணீர் பெறப்பட்டது. அந்த ஆழ்துளைக் கிணறு வறண்டு போனதால் தண்ணீர் விநியோகம் நின்று போனது. 
கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு பதிக்கப்பட்ட காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டக் குழாய்களிலும் தண்ணீர் விநியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
 இந்நிலையில் தொடர் வேண்டுகோளின் பேரில், வெள்ளக்கோவில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் முன்பு இருந்த ஆழ்துளைக் கிணற்றுக்கு அருகில் புதிய ஆழ்துளைக் கிணறு தோண்டப்பட்டது. இதிலிருந்தும் தெருக்குழாய்களில் விநியோகம் செய்யும் அளவுக்குத் தண்ணீர் கிடைப்பதில்லை. அங்கேயே ஆயிரம் லிட்டர் பிளாஸ்டிக் தொட்டி வைத்து தண்ணீர் பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும் என்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.