காங்கயம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரி இனங்களை உரிய காலத்தில் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து காங்கயம் நகராட்சி ஆணையர் தேவிகா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
காங்கயம் நகராட்சியில் வசிக்கும் பொதுமக்கள் நகராட்சிக்குச் செலுத்த வேண்டிய சொத்து வரி, தொழில் வரி, குடிநீர்க் கட்டணம், நகராட்சிக் கடை வாடகை ஆகியவற்றை நகராட்சி அலுவலகத்தில் உடன் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும். மேலும், நடப்பு ஆண்டிற்குச் செலுத்த வேண்டிய வரி இனங்களையும் செலுத்தி நகராட்சி நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
வரி இனங்களைச் செலுத்தத் தவறும்பட்சத்தில் ஜப்தி நடவடிக்கை, நீதிமன்ற மேல் நடவடிக்கை எடுக்கப்படும். பொது மக்களின் வசதிக்கேற்ப சனிக்கிழமை நாள்களிலும் நகராட்சி அலுவலகத்தில் உள்ள வசூல் மையம் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.







