கீர்த்தி சக்ரா விருது பெற்ற ராணுவ வீரருக்கு ரூ.48 லட்சம் நிதியுதவி! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை! சோஃபா மாடல் ஆட்சியில் தொடர் குற்றங்கள்! வென்டிலேட்டரில் சட்டம் - ஒழுங்கு! உதயநிதி விவாகரத்து வழக்கில் காணொலி விசாரணை இல்லை! முதல்வர் விஜய் கோரிக்கை நிராகரிப்பு!குழந்தை பாலியல் கொலை: தமிழ்நாட்டில் அரசு என எதுவும் உள்ளதா? கனிமொழி எம்.பி. கேள்வி தமாகாவில் இருந்து யுவராஜா விலகல் பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி விபத்து! 3 பேர் பலி!!அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் இறுதியானது!
/

லாரி திருடியவர் கைது

திருப்பூர் ரயில் நிலையம் அருகே லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

Updated On :25 டிசம்பர் 2018, 8:23 am IST

திருப்பூர் ரயில் நிலையம் அருகே லாரியை திருடிச் சென்ற நபரை காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
இதுகுறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:
திருப்பூர், அவிநாசி சாலை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர், திருப்பூர்  ரயில் நிலையம் அருகில் உள்ள குட்ஷெட்டில் சொந்தமாக லாரி வைத்து ஓட்டி வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வழக்கம்போல் குட்ஷெட்டில் லாரியை நிறுத்திவிட்டுச் சென்றார். சற்று நேரத்துக்குப் பிறகு அவர் வந்து பார்த்தபோது லாரியை காணாவில்லை.
இது குறித்து உடனடியாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அவர் தகவல் தெரிவித்துள்ளார். தகவல் கிடைத்ததன்பேரில் மண்ணரை சோதனைச் சாவடியில் போலீஸார் அந்த லாரியை மடிக்கிப் பிடித்தனர். லாரியை திருடிச் சென்றது சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த பார்த்திபன் (25) என்பது தெரியவந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.