வெள்ளக்கோவிலில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காயமடைந்த இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
வெள்ளக்கோவில், வள்ளியிரச்சல் சாலை, திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் பாரதி. மூத்தாம்பாளையம் அரசுப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் அஜித்குமார் (20), காங்கயத்திலுள்ள பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த டிசம்பர் 24 ஆம் தேதி இரவு வெள்ளக்கோவில்- காங்கயம் நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி ய பின் நிற்காமல் சென்றுவிட்டது.
இதில் பலத்த காயமடைந்த அஜித்குமார் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









