டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

தொழிலாளர் வைப்பு நிதி செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது வழக்கு

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைச் செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 1:31 am

DIN

தொழிலாளர்களிடம் பிடித்தம் செய்த வைப்பு நிதியைச் செலுத்தாத நூற்பாலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமை வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தாராபுரம்- பொள்ளாச்சி சாலையில் தனியாருக்குச் சொந்தமான நூற்பாலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் 2015 -ஆம் ஆண்டு தொழிலாளர் வைப்பு நிதி செலுத்துவதற்காக ஊதியத்திலிருந்து பணம் எடுக்கப்பட்டது. ஆனால், அந்த பணத்தை தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்துக்கு ஆலை இயக்குநர்கள் செலுத்தாமல் காலம் தாழ்த்தியுள்ளனர். இதுகுறித்து சேலம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமலாக்கப் பிரிவு அதிகாரி ரமேஷ் பாபு, ஆலை நிர்வாகத்துக்கு பல முறை நினைவூட்டல் கடிதம் அனுப்பியும் பயனில்லையாம். 
இதைத் தொடர்ந்து தொழிலாளர் வைப்பு நிதியை முறையாகச் செலுத்தாத ஆலை இயக்குநர்கள் மீது தாராபுரம் காவல் நிலையத்தில் அமலாக்கப் பிரிவு அதிகாரி புகார் செய்தார். இதையடுத்து ஆலை நிர்வாக இயக்குநர்கள் ராஜலட்சுமி மற்றும் ரூபா ஆகியோர் மீது தாராபுரம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் தொழிலாளர் வைப்பு நிதி ரூ.10 லட்சத்து 21 ஆயிரம் மோசடி செய்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.