தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

தொழிலாளி மர்மச் சாவு

தாராபுரம் அருகே தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 3:11 am

DIN

தாராபுரம் அருகே தொழிலாளி ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
தாராபுரம் அருகே உள்ள நாட்டுக்கல்பாளையத்தைச் சேர்ந்தவர் விவசாயத் தொழிலாளி மாரிமுத்து (45). இவர் கடந்த இரண்டு தினங்களுக்கு முன் வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் தாராபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்நிலையில், சந்திராபுரம் கிளை வாய்க்காலில் உடலில் காயங்களுடன் ஒருவர் இறந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்குச் சென்று காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், இறந்து கிடந்தது மாரிமுத்து என தெரிய வந்தது. இது குறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.