திருப்பூர் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற 350 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 33 லட்சம் கல்வி உதவித் தொகையாக ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.
திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மாநகராட்சிப் பள்ளியில் கபடி மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் நடைபெற்ற கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சிக்கு அறக்கட்டளை தலைவர் எம். சுப்பிரமணி தலைமை வகித்தார்.
ஆர். பாலசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பொருளாளர் சண்முகம் வரவேற்றார். இதில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாந்தி மாணவர்களுக்கு உதவித் தொகையை வழங்கினார்.
திருப்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 850 முதல் 1160 மதிப்பெண்கள் வரை பெற்று கல்லூரியில் சேர்ந்து படித்து வரும் மாணவ, மாணவியர் 350 பேருக்கு மொத்தம் ரூ. 33 லட்சம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்பட்டது. துணைத் தலைவர்கள் கே.ராமலிங்கம், சிவபாலன், மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

திருமணத்துக்கு முன் குஷ்பு மகள் அவந்திகா பகிர்ந்த படங்கள்!
கணக்கில் வராத ரூ.40 லட்சம் பறிமுதல்! எ.வ. வேலுக்கு தொடர்புடைய 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை!

தலைவர்களை இழிவுபடுத்தும் இடமல்ல சட்டமன்றம்! கனிமொழி எம்.பி | DMK | TVK

வெனிசுவேலா நிலநடுக்கம்! மீட்புப் படைகளை அனுப்பும் அமெரிக்கா!
விடியோக்கள்

மெஸ்ஸியைத் துரத்தும் எம்பாபே! | FIFA | FIFA World Cup | Messi |

பார்வையாளர்களைப் பரிசோதிக்கும் அனந்தன் காடு: திரைவிமர்சனம்

மின் கட்டணம் உயர்வா? வெள்ளை அறிக்கை வெளியிட்டு பேசிய அமைச்சர் நிர்மல் குமார் | Dinamani


