தாராபுரத்தில் சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்ட நபர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார்.
புது காவல் நிலையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையின் மதுக் கூடத்தில் அதிகாலை நேரங்களில் மது விற்பனை நடைபெறுவதாக கோட்ட கலால் துறையினருக்குப் புகார்கள் வந்துள்ளன. இதையடுத்து, கலால் உதவி ஆணையர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் சம்பந்தப்பட்ட மதுக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, செல்வம் (22) என்பவர் மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதையடுத்து, மது விலக்கு காவல் துறையினர் செல்வத்தைக் கைது செய்து, 25 மது பாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








