தமிழகத்தில் இன்றும், நாளையும் மழைக்கு வாய்ப்புகாமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

உடுமலை வட்ட ஜமாபந்தி நிறைவு

உடுமலையில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வியாழக்கிழமை நிறைவு பெற்றது. 

Updated On :30 ஜனவரி 2024, 6:45 pm IST

உடுமலையில் கடந்த 15 நாள்களாக நடைபெற்று வந்த ஜமாபந்தி (வருவாய்த் தீர்வாயம்) வியாழக்கிழமை நிறைவு பெற்றது. 
உடுமலை வட்ட வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்டாட்சியர் எஸ்.அசோகன் தலைமையில் கடந்த மே  22ஆம் தேதி தொடங்கி, 15 நாள்களாக நடைபெற்று வந்தது. 
இதில்,  மொத்தம் 75 வருவாய் கிராமங்களின் வரவு, செலவுக் கணக்குகள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.  கிராம மக்களிடம் இருந்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 1,232 மனுக்கள் பெற்றுக் கொள்ளப்பட்டன. 
இதில், பெரும்பாலான மனுக்கள் முதியோர் உதவித் தொகை கோரி அளிக்கப்பட்டிருந்தன. 420  மனுக்களுக்கு உடனடியாகத் தீர்வு காணப்பட்டுள்ளது. மீதமுள்ள மனுக்கள் பரிசீலனையில் உள்ளன.
ஜமாபந்தி நிறைவு விழா வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. கோட்டாட்சியர் எஸ்.அசோகன், வட்டாட்சியர் தங்கவேல், துணை வட்டாட்சியர் பொன்ராஜ், வருவாய்த் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.