பனப்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
பல்லடம், பனப்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.


பல்லடம், பனப்பாளையம் மாரியம்மன் கோயில் பொங்கல் விழா புதன்கிழமை நடைபெற்றது.
பல்லடம் பனப்பாளையத்தில் விநாயகர், மாகாளியம்மன், மாரியம்மன் கோயில் பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி கிராமசாந்தி, அம்மன் அழைப்பு, கம்பம் போடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து பூவோடு மற்றும் மாவிளக்கு எடுத்தல் நிகழ்ச்சி நடைபெற்றன. இதில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. இதைத்தொடர்ந்து அம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...