ஒற்றை உரிமம் பெற்று நாடு முழுவதும் வணிகம் செய்ய பல்லடம் ஒழுங்குமுறை விற்பனை மையம் வணிகர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
தமிழகத்தில் 250-க்கும் மேற்பட்ட ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் இயங்கி வருகின்றன. அவற்றில் சோதனைச் சாவடி, சேமிப்புக் கிடங்கு, தரம் பிரிக்கும் மையங்கள் உள்ளன.
இவற்றில் நிலக்கடலை, புளி, எள், கரும்பு, வெல்லம், நெல், கம்பு, சோளம், வரகு, கொள்ளு, தேங்காய், உருளைக்கிழங்கு, துவரை, மஞ்சள், மக்காச்சோளம் உள்பட பல்வேறு விளைபொருள்கள் விற்பனை செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பல்லடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூட கண்காணிப்பாளர் அழகிரி சாந்தலிங்கம் கூறியதாவது: மத்திய அரசின் ஒரே நாடு ஒரே சந்தை என்ற இலக்கை அடைய வணிகர்கள் மாநிலம் முழுவதும் வணிகம் செய்ய ஒரே உரிமம் பெற்றால் போதும் என்ற சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
அதன்படி, ஒற்றை உரிமத்தைப் பெற வணிகர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
விருப்பமுள்ள வணிகர்கள் உடனடியாக பல்லடம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை அணுகி பயன் பெறலாம். இந்த ஒற்றை உரிமம் பெற்றவர்கள் நாடு முழுவதும் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் மூலம் நடக்கும் இணையதள ஏலத்திலும் பங்கேற்கலாம் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







