ரூ.2.47 லட்சம் கோடி கடன்!! மின்வாரிய வெள்ளை அறிக்கை வெளியானது! தமிழக மின்துறையில் 20,449 காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும்: அமைச்சர் நிர்மல் குமார்எ.வ. வேலு உள்பட 11 பேர் மீது வழக்கு! தொடரும் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைசெந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை!முதல்வர் விஜய், என் மீது விமர்சனங்கள் வைக்கட்டும்! அதில் என்ன பிரச்னை? மு.க. ஸ்டாலின்பெரம்பூர் செல்லும் அரசுப் பேருந்தில் பயணித்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்!300 அரசுப் பேருந்துகள் சேவைகளை தொடக்கிவைத்து பயணம் செய்த முதல்வர் விஜய்! அமோனியா கசிவு: ஆலையில் 13 டன் கடல் உணவுகள் பறிமுதல்!சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூன் 25) சவரனுக்கு ரூ. 1,680 குறைந்துள்ளது!சமூக நீதிக்காக திமுக செய்யாததை தவெக செய்கிறது: ஆதவ் அர்ஜுனாசட்டப்பேரவை மரபை தவெக மீறவில்லை: ஆதவ் அர்ஜுனாமுன்னாள் அமைச்சர் எ.வ. வேலு வீடு, அலுவலகத்தில் லஞச் ஒழிப்புத் துறை சோதனைஅமோனியா கசிவு: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
/

பல்லடம் அருகே பெண் கொலை வழக்கில் கள்ளக் காதலன் கைது

பல்லடம் அருகே கிரிச்சிபாளையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக் காதலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். 

Updated On :5 நவம்பர் 2018, 7:43 am IST

பல்லடம் அருகே கிரிச்சிபாளையத்தில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் கள்ளக் காதலன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டார். 
பல்லடம் அருகேயுள்ள எலவந்தி வடுகபாளையம் ஊராட்சி கிரிச்சிபாளையம் கிராமத்தில் ராமசாமி என்பவரின் வீட்டில் அடையாளம் தெரியாத பெண் சடலம் கடந்த வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டது. இது குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில், சடலமாகக் கிடந்தவர் கோவை மாவட்டம், அன்னூர் சவக்கட்டுபாளையத்தைச் சேர்ந்த லதா (37) என்பதும், இவரது கணவர் தாராபுரத்தைச் சேர்ந்த சக்திவேல் எனவும், இந்தத் தம்பதிக்கு  2 பெண் குழந்தைகள் இருப்பதும் தெரியவந்தது.  கணவன், மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 
5 ஆண்டுகளாகப் பிரிந்து வாழ்ந்தனர்.
 கணவனைவிட்டுப் பிரிந்த லதா பல்லடம் அருகேயுள்ள கள்ளக்கிணறுப் பகுதியில் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள தனியார் நூற்பாலையில் வேலைக்கு சென்று வந்தார். இவருக்கும், அதே நூற்பாலையில் பிட்டராக வேலை செய்து வந்த செந்தில் (40) என்பவருக்கும் கள்ளத் தொடர்பு இருந்ததாம். இதன், காரணமாக அவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.
செந்தில் மதுப் பழகத்துக்கு அடிமையானதால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம்.
  கடந்த ஆண்டு தீபாவளி பண்டிக்கைக்கு முன்பு செந்தில் மது போதையில் வீட்டில் தகராறு செய்துள்ளார். அப்போது, ஆவேசம் அடைந்த செந்தில்  மரக்கட்டையால் லதாவின் தலையில் பலமாக அடித்துள்ளார். இதில்,  லதா ரத்த வெள்ளத்தில் இறந்துள்ளார். லதாவின் சடலத்தை பேரலில் மண் போட்டு மூடி யாருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் அதன் மேல் காலி அட்டை பெட்டியை வைத்து மூடி வைத்து விட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று வந்துள்ளார். பின்னர் அந்த வீட்டை விட்டு வெளியேறி கள்ளக்கிணறு பகுதியில் வேறு வீட்டில் வசித்து வந்தார். குழந்தையை தாராபுரம் சின்னகாம்பாளையத்தில் உள்ள தனது தாயாரிடம் ஒப்படைத்துள்ளதாகத் தெரியவந்தது.
காமநாயக்கன்பாளையம் காவல் நிலைய ஆய்வாளர் அருள் தலைமையிலான தனிப்படை போலீஸார் துத்தாரிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த செந்திலை ஞாயிற்றுக்கிழமை காலை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.