மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில்  பெயர் சேர்க்க 44 ,611 விண்ணப்பங்கள்

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 44, 611 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளன.

Updated On :5 நவம்பர் 2018, 7:43 am IST

திருப்பூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக 44, 611 விண்ணப்பங்கள் பெற்றப்பட்டுள்ளன.
இது குறித்து மாவட்ட தேர்தல் வட்டாட்சியர் முருகதாஸ் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம், காங்கயம், அவிநாசி, திருப்பூர் வடக்கு,  திருப்பூர் தெற்கு, பல்லடம், உடுமலைபேட்டை, மடத்துக்குளம் ஆகிய எட்டு தொகுதிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் அக்டோபர் 31ஆம் தேதி முடிய கடந்த இரு மாதங்களில் வாக்காளர் பட்டியலில் புதிதாகப் பெயர் சேர்க்க 41 ஆயிரத்து 947 படிவங்கள் நேரடியாகவும், ஆன்லைன் மூலம் 2 ஆயிரத்து 664 படிவங்களும் என மொத்தம் 44 ஆயிரத்து 611 பெயர் சேர்ப்புப் படிவங்கள் பெறப்பட்டுள்ளன.
  நேரடியாகப் பெறப்பட்ட படிவங்களில் 18 ஆயிரத்து 959 படிவங்கள் 18 வயது முதல் 19 வயதுக்கு உள்பட்டவர்கள், 8 ஆயிரத்து 330 படிவங்கள் 20 வயது முதல் 21 வயதுக்கு உள்பட்டவர்கள் ஆவர். 
புதிதாகப் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் கள ஆய்வு செய்யப்பட்டு, மேற்பார்வையாளர்களால் சரி பார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட தொகுதிக்கு பொறுப்புடைய வட்டாட்சியர், சார் ஆட்சியர்கள், கோட்டாட்சியர்கள், மாநகர ஆணையர் ஆகியோரால் மேலாய்வு செய்யப்பட்டு வாக்காளர் பட்டியலில் சேர்க்கும் முடிவு இறுதி செய்யப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் 2019 ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.