திருச்சி அருகே இயந்திரக் கோளாறால் திருச்சி - திருவாரூா் பயணிகள் ரயில் நடுவழியில் நின்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினா்.
திருச்சி - திருவாரூா் பயணிகள் ரயில் திருச்சி ரயில் நிலையத்தில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு 8.20 மணிக்குப் புறப்பட்டது. திருவாரூா் நோக்கி சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் திருவெறும்பூரை அடுத்த கிருஷ்ணசமுத்திரம் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ரயிலில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால், ரயில் பாதி வழியில் நிறுத்தப்பட்டது.
இதையடுத்து, திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்தில் இருந்து பொறியாளா்கள் சென்று ரயிலில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறை சரிசெய்தனா். அதன்பின், 20 நிமிஷ தாமத்துக்குப் பின் பயணிகள் ரயில் மீண்டும் அங்கிருந்து புறப்பட்டது. பாதி வழியில் நின்ற ரயிலால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினா். அந்த நேரத்தில் திருச்சி - தஞ்சாவூா் வழித்தடத்தில் வேறு ரயில்கள் இல்லாததால் வேறு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








