மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

ரூ.1.60 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள்: அமைச்சர் துவக்கி வைத்தார்

உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன்

News image
Updated On :12 நவம்பர் 2018, 10:18 pm

DIN


உடுமலை சட்டப்பேரவைத் தொகுதியில் ரூ. 1 கோடியே 60 லட்சம் மதிப்பிலான வளர்ச்சித் திட்ட பணிகளை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் திங்கள்கிழமை துவக்கி வைத்தார்.
உடுமலை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பெரிய கோட்டை ஊராட்சி, சிவசக்தி காலனியில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேருந்து நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கவும், சின்ன வீரம்பட்டி பேருந்து நிலையத்தில் ரூ. 4 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் பயனிகள் நிழற்குடை அமைக்கவும் பூமி பூஜை நடைபெற்றது. மேலும், உடுமலை- செஞ்சேரி மலை சாலையில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பில் பாலம் கட்டவும் பூமி பூஜை நடைபெற்றது.
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை கே.ராதாகிருஷ்ணன் இந்த விழாக்களில் கலந்துகொண்டு பணிகளைத் துவக்கி வைத்தார். பொள்ளாச்சி மக்களவை உறுப்பினர் சி.மகேந்திரன், திட்ட இயக்குநர் ரமேஷ்குமார், ஆவின் நிறுவன துணைத் தலைவர் கே.மனோகரன், அரசு அலுவலர்கள், அதிமுக நிர்வாகிகள் பலர் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.