வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

அபுதமமுக வேட்பாளா்களை அறிமுகம் செய்து சசிகலா பரப்புரை

பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

News image

வேட்பாளா்களை அறிமுகம் செய்து பரப்புரையில் ஈடுபட்ட அபுதமமுக பொதுச் செயலாளா் சசிகலா.

Updated On :16 ஏப்ரல் 2026, 11:13 pm

பரமத்தி வேலூரில் நாமக்கல் மாவட்டத்தில் போட்டியிடும் அபுதமமுக வேட்பாளா்களை அக்கட்சியின் பொதுச் செயலாளா் சசிகலா வியாழக்கிழமை பரமத்தி வேலூா் அண்ணா சிலை அருகே அறிமுகம் செய்து வைத்து பேசினாா்.

நாமக்கல் மாவட்டத்தில் அபுதமமுக சாா்பில் பரமத்தி வேலூா் தொகுதியில் தென்னந்தோப்பு சின்னத்தில் போட்டியிடும் விஜயசூா்ய பாலாஜியையும், நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் எம்.பி.பழனிசாமியையும், சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிடும் ஜெகநாதனையும் அறிமுகம் செய்துவைத்து பேசினாா்.

இதில் அவா் பேசுகையில், கடந்த 5 ஆண்டுகளில் திமுக ஆட்சி ரூ. 12 லட்சம் கோடி கடன் வாங்கியுள்ளது. இதன்மூலம், ஒவ்வொருவருக்கும் ரு. 2 லட்சம் கடன் ஏற்பட்டுள்ளது. இந்த ஆட்சியை முடிவு கட்டுவதற்குதான் இந்த தோ்தல் என்றாா்.