செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் கிருஷ்ண ஜயந்தி

வெள்ளக்கோவிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:07 am

வெள்ளக்கோவிலில் விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கிருஷ்ண ஜயந்தி விழா கொண்டாடப்பட்டது.
வெள்ளக்கோவில், செம்மாண்டம்பாளையம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த விழாவுக்கு, விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்டத் தலைவர் சுந்தரசாமி தலைமை வகித்தார். 
ஆன்மிகச் சொற்பொழிவு நடத்தப்பட்டு, கிருஷ்ணர் வேடமிட்ட குழந்தைகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. பின்னர் கோகுலாஷ்டமி குறித்தும், கிருஷ்ணர் வரலாறு குறித்தும் விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.
இந்த விழாவில் பா.ஜ.க.வினரும் கலந்துகொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை வெள்ளக்கோவில் வட்டார விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.