மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தாராபுரம் ஒன்றியத்தில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

தாராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:09 am

தாராபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கால்நடை மருத்துவர்கள் குழு கிராமம்தோறும் சென்று கால்நடைகளுக்கு இலவசமாக கோமாரி தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர். சடையபாளையம், பெரியகுமாரபாளையம், கெத்தல்ரேவ், ஜோதியம்பட்டி, கொக்கம்பாளையம், சூரியநல்லூர், பெருமாள்பாளையம், காளிபாளையம், செங்கோடம்பாளையம், சிறுகிணறு ஆகிய ஊராட்சிகளில் உள்ள கிராமப் பகுதிகளில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றன. கால்நடைகளுக்கு காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை தடுப்பூசி போடப்பட்டது. 
இம்முகாமில் 4 மாதத்துக்கு மேல் உள்ள அனைத்து கன்றுக் குட்டிகள், கறவை பசுக்கள், சினைப் பசுக்கள், எருமைகள் ஆகியவற்றுக்குத் தடுப்பூசி போட்டு பயனடையவும், கூடுதல் தகவல்களுக்கு அந்தந்தப் பகுதி கால்நடை மருந்தகங்களைத் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம் என்றும் கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்திருந்தனர்.
இதில், மொத்தம் 1.14 லட்சம் கால்நடைகளுக்குத் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.