குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய  செப்டம்பர் 9இல் சிறப்பு முகாம்

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 9) நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விடுத்துள்ள அறிக்கை:
திருப்பூர் மாவட்ட சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள அனைத்து நிர்ணயிக்கப்பட்ட வாக்குச்சாவடி மையங்களிலும்,  ஞாயிற்றுக்கிழமை  காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.   
இந்த வாய்ப்பினை 2019 ஜனவரி 1ஆம் தேதி 18 வயது பூர்த்தியானவர்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம்.  
மேலும்,  வாக்காளர் பட்டியலில் பெயர் இடம் பெறாதவர்கள், வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய விரும்புவோர், பெயர் நீக்கம் செய்ய விரும்புவோர், ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் முகவரி மாற்றம் செய்வது போன்ற கோரிக்கைகள் தொடர்பாக,  குறிப்பிட்ட படிவங்களில் உரிய ஆவணங்களை இணைத்து வாக்குச்சாவடி மையங்களில்  விண்ணப்பிக்கலாம். 
இதில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6, வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம் செய்ய  படிவம் 7,  வாக்காளர் பட்டியலில் உள்ள பதிவுகளில் திருத்தம் செய்ய படிவம் 8, ஒரே தொகுதிக்குள் குடியிருப்பு மாறியவர்கள் புதிய குடியிருப்பு  முகவரி மாற்றம் செய்ய படிவம் 8ஏ ஆகியவற்றைப் பயன்படுத்திப்  பயனடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.