முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்!முதல்வர் விஜய் நாளை தில்லி பயணம்! குர்மீத் ராம் ரஹீமுக்கு 16 -வது முறையாக பரோல்! அதிமுக எம்.எல்.ஏ. இசக்கி சுப்பையா ராஜிநாமா!அதிமுக எம்.எல்.ஏ-க்கள் ராஜிநாமா செய்த தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 400 குறைவு!பயிர்க்கடன் தள்ளுபடியில் ஏமாற்று வேலை - எடப்பாடி பழனிசாமி கண்டனம்!கோடியக்கரையிலிருந்து கடலுக்கு சென்ற 4 மீனவர்கள் மாயம்!சிஎன்ஜி விலை கிலோவுக்கு ரூ.2 உயர்வு!8 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கை!ஜூலையில் பத்தாம் வகுப்பு துணைத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்ஐபிஎல்: பெங்களூரு - குஜராத் இன்று பலப்பரீட்சை!பக்ரீத், வார இறுதி: 4,195 சிறப்பு பேருந்துகள்!ஈரான் அமைதிப் பேச்சில் சுமுக முன்னேற்றம்: டிரம்ப்
/

பாஜக நிர்வாகியின் கார் கண்ணாடி உடைப்பு

திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On :13 பிப்ரவரி 2019, 7:52 am IST

திருப்பூரில் பாஜக பொறுப்பாளரின் கார் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
இது குறித்து திருப்பூர் வடக்கு காவல் துறையினர் கூறியதாவது:   திருப்பூர் மாவட்ட பாஜக பிற்பட்டோர் பிரிவு மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருபவர் முனீஸ்வரபாண்டியன் (40). இவரது வீடு கொங்கு பிரதான சாலையில் உள்ள அக்கட்சி அலுவலகத்துக்கு அருகில் உள்ளது. இந்த நிலையில், முனீஸ்வரபாண்டியன் திங்கள்கிழமை இரவு வீட்டின் அருகில் தனது காரை நிறுத்தி விட்டுச்சென்றுள்ளார். அவர் செவ்வாய்க்கிழமை அதிகாலை வந்து பார்த்தபோது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டிருந்து தெரியவந்தது.   
இது குறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற திருப்பூர் வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அந்த வீட்டின் அருகில் உள்ள பின்னலாடை நிறுவனங்கள், வணிக வளாகங்கள் ஆகியவற்றில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராவில் இந்த சம்பவம் பதிவாகியுள்ளதா என காவல் துறையினர் கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.