திருப்பூர்: பிரதமரின் கிஸான் திட்டத்தில் உதவித் தொகை பெறுவதற்காக 46,750 சிறு, குறு விவசாயிகள்விண்ணப்பித்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகளுக்கு முதல் தவணை நிதியை ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி ஞாயிற்றுக்கிழமை வழங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது: பிரதமரின் கிஸான் திட்டத்தின் கீழ் சிறு, குறு விவசாயிகள் பயனடையும் வகையில் ரூ. 6 ஆயிரம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 350 விவசாயிகளுக்கு முதல் தவணைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 1.25 லட்சம் விவசாயிகள் உள்ளதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதில், தற்போது வரையில் 46,750 விவசாயிகள்விண்ணப்பித்துள்ளனர். இதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் புதன்கிழமை வரையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் கிராமங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன. ஆகவே, விடுபட்ட விவசாயிகள் தகுந்த ஆவணங்களை இந்த முகாம்களில் சமர்ப்பித்து பயனடையலாம் என்றார்.
வேளாண்மைத் துறை இணை இயக்குநர் வளர்மதி, துணை இயக்குநர்கள் அரசப்பன், வடிவேல், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநர் சுகந்தி, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








