திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

கிணற்றுக்குள் இருசக்கர வாகனங்கள்

 மயில்ரங்கம் அருகே பொதுக் கிணற்றுக்குள் கிடந்த இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.

Updated On :25 பிப்ரவரி 2019, 10:21 am IST


வெள்ளக்கோவில்:  மயில்ரங்கம் அருகே பொதுக் கிணற்றுக்குள் கிடந்த இருசக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
மயில்ரங்கம் அருகே அமராவதி ஆற்றோரத்தில் பொதுக் கிணறு உள்ளது.  இக்கிணற்றில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. கிணற்றில் தற்போது நீர்மட்டம் குறைந்து வருகிறது. நீர்மட்டம் குறைந்துள்ள நிலையில், கிணற்றுக்குள் இரண்டு இருசக்கர வாகனகள், சைக்கிள் கிடப்பது ஊர் மக்களுக்கு தெரியவந்தது.
தகவலின்பேரில் சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புத் துறையினர் அவற்றை மீட்டனர். வெள்ளக்கோவில் காவல் நிலையத்தில் இருசக்கர வாகனங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை திருட்டு வாகனமாக இருக்கலாமெனத் தெரிகிறது. இது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.