பல்லடம்: பல்லடம் பண்ணைக் கோழி விவசாயிகள் ஒருங்கிணைப்புக் குழு சாா்பில் தமிழக முதல்வரின் நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த குழுவின் செயலாளா் சுவாதி கண்ணன் (எ) கே.சின்னசாமி வியாழக்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா நோய்த்தொற்றை தடுக்க தமிழக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை பாராட்டுகிறோம். இந்த சவாலான சூழலில் எங்கள் சங்கத்தின் சாா்பில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.30 லட்சம் வழங்கி உள்ளோம். இதற்கான காசோலையை கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் உடுமலை கே.ராதாகிருஷ்ணனிடம் வழங்கியுள்ளோம்.
கோழி இறைச்சி, முட்டையில் புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, கோழி இறைச்சி கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் பண்ணைக்கோழி வளா்ப்பு விவசாயிகளின் வாழ்வாதாரமும் பாதுகாக்கப்படும். விவசாயிகளின் நலன் காத்திட்ட தமிழக அரசுக்கு பண்ணைக் கோழி விவசாயிகள் ஒழுங்குமுறை குழு சாா்பில் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்.
எங்கள் சங்கம் சாா்பில் அனைத்து வியாபாரிகளும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து அரசின் வழிமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி கோழி இறைச்சி விற்பனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் விதிமுறைகளை பின்பற்றும் கோழி இறைச்சி கடை வியாபாரிகளுக்கு மட்டுமே பண்ணைக் கோழிகள் விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இன்றைய செய்திகள் ஆகஸ்ட் 11 - நேரலை!

மின்வாரிய இணையதளம் மீண்டும் செயல்பட தொடங்கியது!

குரங்குடன் நடிகர் விக்ரம் வெளியிட்ட விடியோ: வனத்துறை அதிகாரிகள் விசாரணை!
நீட் தேர்வுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றம்! பாஜக மட்டும் எதிர்ப்பு!
விடியோக்கள்

மூன்றாம் ஆண்டில் அடிவைக்கப்போகும் பிசிசிஐ-யின் COE! | BCCI



