திருப்பூர் அருகே மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 16 அம்ச மக்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 20 முதல் 26 ஆம் தேதி வரையில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இரா.குமார் தலைமைவகித்தார்.
இதில், பங்கேற்றவர்கள் கூறியதாவது: கரோனா பாதிப்பு குறையாததால் மக்களை அவதிக்குள்ளாக்கும் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய வேண்டும். கரோனா நோய்த் தொற்றால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.7,500 வழங்க வேண்டும். தமிழக அரசு நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை இலவசமாக வழங்க வேண்டும்.
புதிய கல்விக் கொள்கை, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு வரைவுச்சட்டம் 2020 ஆகியவற்றை திரும்பப்பெற வேண்டும் என்பன உள்ளிட்ட 16 கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில், குன்னத்தூர் நகர செயலாளர் பா.சின்னசாமி, கருமஞ்சிறை கிளைச் செயலாளர் ச.பன்னீர்செல்வம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒத்தைப்பனைமேடு, வட்டாலப்பதி ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...