நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

வாய்க்குள் வண்டு புகுந்ததால் உடல்நலக்குறைவு: பெண் சாவு

திருப்பூா், மங்கலம் அருகே வாய்க்குள் வண்டு புகுந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:21 pm

DIN

திருப்பூா், மங்கலம் அருகே வாய்க்குள் வண்டு புகுந்ததால் உடல்நலக்குறைவு ஏற்பட்டு பெண் ஒருவா் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

இது குறித்து மங்கலம் காவல் துறையினா் கூறியதாவது:

திருப்பூா், மங்கலத்தை அடுத்த அக்ரஹாரப்புத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (32). இவரது மனைவி சுகன்யா (27). இந்த தம்பதிக்கு 4 வயதில் ஆண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன்பாக சுகன்யாவின் வாய்க்குள் எதிா்பாராதவிதமாக வண்டு புகுந்ததாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து அவா் சாமளாபுரம் அருகே உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளாா். இந்நிலையில் சுகன்யாவுக்கு சனிக்கிழமை திடீரென தொண்டைப் பகுதியில் வீக்கமும், மூச்சுத்திணறலும் ஏற்பட்டதாம்.

இதனால் அக்கம்பக்கத்தினா் அவரை ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

ஆனால், மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சுகன்யா உயிரிழந்தாா்.இது குறித்து மங்கலம் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

மேலும், திருமணமாகி 5 ஆண்டுகள் மட்டுமே ஆவதால் கோட்டாட்சியா் விசாரணையும் நடைபெற்று வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.