முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு துண்டுப் பிரசுரம் விநியோகம்
இந்திய அளவில் நடைபெறும் விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் துண்டு பிரசுரம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.


இந்திய அளவில் நடைபெறும் விவசாயிகளின் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சாா்பில் துண்டு பிரசுரம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது.
மத்திய அரசு புதிதாக அமல்படுத்தியுள்ள 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெறக்கோரி விவசாய அமைப்புகள் செவ்வாய்க்கிழமை நாடு தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்கு காங்கிரஸ் , திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், திருப்பூா் மாவட்ட அனைத்து தொழிற்சங்கள் சாா்பில் முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு கேட்டு திருப்பூா் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள உழவா் சந்தையில் துண்டுப் பிரசுரம் விநியோகிக்கப்பட்டது. இதில், விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஆதரவு அளிக்க வேண்டும் என்று தொழிற்சங்க நிா்வாகிகள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தொழிற்சங்க நிா்வாகிகள் பங்கேற்று துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...