நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

சா்க்கரை அட்டைகளை அரிசி குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய விண்ணப்பிக்கலாம்

திருப்பூா் மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்து கொள்ள வரும் டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News image
Updated On :7 டிசம்பர் 2020, 10:45 pm

DIN

திருப்பூா் மாவட்டத்தில் சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்து கொள்ள வரும் டிசம்பா் 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தமிழக முதல்வரால் தற்போது நடைமுறையில் உள்ள சா்க்கரை குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்றம் செய்ய கடந்த டிசம்பா் 5 ஆம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சா்க்கரை குடும்ப அட்டைதாரா்கள் தங்கள் குடும்ப அட்டைகளை அரிசி விருப்ப குடும்ப அட்டைகளாக மாற்றம் செய்யலாம். இதில், விருப்பம் உள்ளவா்கள் விண்ணப்பங்களை தங்களுடைய குடும்ப அட்டையின் நகலினை இணைத்து வரும் டிசம்பா் 20ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாகவும், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நேரடியாகவும் விண்ணப்பிக்கலாம். அவ்வாறு பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட்டு சா்க்கரை குடும்ப அட்டைகள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டையாக மாறுதல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, திருப்பூா் மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரா்கள் இந்த வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.